நீங்கள் ஃபேஸ்புக் வலைத்தளத்தில் எப்போதாவது உங்களுடைய நிறத்திட்டத்தை (Colour Scheme) மாற்ற முயற்சித்திருக்கிறீர்களா?
ஆம் எனில், உடனடியாக உங்கள் கருவியிலிருந்து நீக்கிவிடவும்.
இந்த நிறம் மாற்றும் தீம்பொருள்தான் (Malware) இன்று ஃபேஸ்புக்கில் உலவும்
புது விதமான வைரஸ். இதனால், உலகம் முழுவதும் கிட்டதட்ட 10,000 பேரின்
ஃபேஸ்புக் கணக்கு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸை ஃபேஸ்புக் நிறுவனம் பலமுறை சரிசெய்தாலும், மீண்டும் மீண்டும் உருவாக்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வைரஸ், பயனீட்டாளர்கள் தங்களது கணக்கின் நிறத்தை மாற்றமுடியும் என்ற செய்தியுடன் இருக்கும் செயலியின் (Software) விளம்பரமாக தொடங்குகிறது.
இந்த செயலியைப் (Software) பதிவிறக்கம் செய்தபின், வைரஸுடன் கூடிய வலைதளத்திற்கு
திசைத்திருப்பப்படுகிறது. இங்குதான் வைரஸ் தாக்கும் ஆபாயம் ஏற்படுகிறது.
ஃபேஸ்புக் கணக்கில் எப்படி நிறம் மாற்றுவது என்பதை விளக்கும் வீடியோவைப்
பார்க்குமாறு கூறும் இந்த வலைதளம், பயனீட்டாளர்களின் கணக்கையும்,
பயன்பாட்டையும் திருடுகிறது.
இந்த வைரஸின் தற்காலிக பயன்பாடு, அவர்களது ஃபேஸ்புக் நண்பர்களின் கணக்கையும் ஹாக்கர்கள் தொடர்பு கொள்ள உதவுகின்றது.
ஒருவேளை பயனீட்டாளர் இந்த வீடியோவை பார்க்கவில்லையெனில், இந்த வலைதளம்
அவர்களை வைரஸுடன் கூடிய செயலியைப் (Software) பதிவிறக்கம் செய்யுமாறு தெரிவிக்கிறது.
"ஒருவேளை இந்த செயலியை (Software) நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால், அதனை உங்களுடைய
கணினியிலிருந்தோ அல்லது ஸ்மார்ட்போனில் இருந்தோ நீக்கிவிட்டு,
ஃபேஸ்புக்கின் பாஸ்வோர்ட்டை மாற்றவும்”, என்று சீனாவில் இணையம் நிறுவனமான
‘சீட்டா மொபைல்’ தெரிவிக்கின்றது.
0 comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.