படிப்பின் தேவைக்கோ பணியின் தேவைக்கோ பென் ட்ரைவ்களையும், எக்ஸ்டெர்னல்
ஹார்டிஸ்க்குகளையும் பயன்படுத்துகிறோம். நாம் அவற்றைப் பல கணினிகளிலும்
மடிக்கணினிகளிலும் பயன் படுத்துவோம். அப்போது நம்மை அறியாமலேயே சில
சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில்
பயன்படுத்திவிடுவோம்.
பல நாட்கள் உழைத்துச் சேகரித்த ஆவணங்கள் உள்ளிட்டு பெரும்பாலும் நமது
அதிமுக்கியமான கோப்புகளை நாம் பென் ட்ரைவ்களில் வைத்திருப்போம். மால்வேர்
தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றைப் பயன்படுத்திய பிறகு, நமது
பென் ட்ரைவைச் சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த கோப்புகள்
எல்லாம் காணாமல் போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள அவற்றின் ஷார்ட் கட்கள்
மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம்.
ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள எல்லாம் போய்விட்டது என்று முடிவு
செய்துவிடுவார்கள். அதனால் பென் ட்ரைவை பார்மெட்கூட செய்துவிடுவார்கள். பல
நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்று தலையில் கை வைத்து அமர்வார்கள்.
கவலை வேண்டாம்.
இழந்த கோப்புகளை மீட்டெடுக்க ஒரு வழி இருக்கிறது.
முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ட்ரைவ்
லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு
சென்று CMD என டைப் செய்து DOS promptக்குச் செல்லுங்கள். அங்கு ட்ரைவ்
லெட்டரை டைப் செய்து (G:) என்டர் கீயை அழுத்தி, அந்தக் குறிப்பிட்ட
ட்ரைவிற்குச் செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை
அழுத்த, நமது ட்ரைவில் (நாம் இழந்ததாக கருதிய) அனைத்து கோப்புகளும் hidden
வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்? DOS prompt -ல் இருந்து கொண்டு,
Attrib -r -s -h /s /d G:*.*
என்ற கட்டளையைக் கொடுங்கள். அவ்வளவுதான்
உங்கள் கோப்புகள் மீட்கப்பட்டுவிடும். பிறகு தேவையற்ற ஷார்ட் கட்கள்,
மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து
விடுங்கள்.
0 comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.